மாவட்ட செய்திகள்

திருவாரூரில், சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தினத்தந்தி

திருவாரூர்:

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கோரிக்கை விளக்கி பேசினார்.

கோஷமிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த செய்யப்படாத தொடக்க வேளாண்மை கடன் சங்க ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய ஒப்பந்தம் செய்திட வேண்டும்.

பணி வரன் முறை செய்யாத ஊழியர்களுக்கு உடன் பணி வரன் முறைப்படுத்திட வேண்டும். பணிசுமையுடன் வேலை செய்யும் ரேஷன் கடைகளுக்கு ஊழியரை நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவீந்திரன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு