மாவட்ட செய்திகள்

திட்டக்குடியில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

திட்டக்குடியில் பேரூராட்சிக்கு வாடகை பாக்கி இருந்ததால் 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

தினத்தந்தி

திட்டக்குடி,

திட்டக்குடி கடைவீதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் அம்பேத்கர் வணிக வளாகம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளை நடத்துபவர்களில் சிலர் வாடகை பாக்கியாக ரூ.7 லட்சத்து 73 ஆயிரத்து 394 வைத்திருந்தனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இருப்பினும் வாடகை பாக்கியை சம்பந்தப்பட்டவர்கள், செலுத்தவில்லை. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் வாடகை பாக்கி வசூலிப்பதற்காக தண்டோரா மூலம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வாடகை பாக்கி செலுத்தவில்லை.

இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மூத்த உதவியாளர் கண்ணன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவினர் அம்பேத்கர் வணிக வளாகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு