தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 282 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 555 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்து 583 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 144 பேர் இறந்து உள்ளனர்.