மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின

தூத்துக்குடியில்கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின

தூத்துக்குடி:

குளத்தூர் குழந்தை விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக சுமார் 49 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா, இந்து முன்னணி, தமிழ்நாடு மக்கள் கட்சியினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் சிவலோக நாயகி தலைமையில் பொது ஏலம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு, அந்த நிலம் 11 பகுதியாக பிரிக்கப்பட்டு ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு