மாவட்ட செய்திகள்

திருமுல்லைவாயலில், ஓய்வுபெற்ற தாசில்தார் தீயில் கருகி சாவு

திருமுல்லைவாயலில், ஓய்வுபெற்ற தாசில்தார் தீயில் கருகி பலியானார்.

ஆவடி,

திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சங்கரராமன் (வயது 75). புதுக்கோட்டையில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி சீதாலட்சுமி இறந்துவிட்டதால், திருமுல்லைவாயல் வந்து தனது மகன் ராமச்சந்திரன் (42) உடன் வசித்து வந்தார்.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ராமச்சந்திரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சங்கரராமன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரை கவனிக்க வேறு யாரும் வீட்டில் இல்லாததால் தந்தையை ராமச்சந்திரனே கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை ராமச்சந்திரன், தனது தந்தையை வீட்டுக்குள் வைத்து, கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார பெட்டியில் இருந்து தீப்பொறி பறந்து, அங்கிருந்த சோபாவில் விழுந்து தீப்பிடித்தது. சோபாவில் படுத்து இருந்த சங்கரராமன் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே புகுந்து சங்கரராமனை மீட்டனர். அதற்குள் தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் சோபா மற்றும் கட்டிலில் எரிந்த தீயை அணைத்தனர்.

பலத்த தீக்காயம் அடைந்த சங்கரராமனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் சங்கரராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு