திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 558 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,915 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.