மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 360 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் நேற்று கடம்பத்தூர், கொட்டையூர், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், பாப்பரம்பாக்கம், நயப்பாக்கம், பேரம்பாக்கம் போன்ற பகுதிகளில் 38 பேர் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 360 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 154 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 3 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 133 பேர் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கும் 26 வயது வாலிபர், கோகுலம் காலனி கோபால் நகரை சேர்ந்த 47 வயது ஆண், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், மறைமலைநகர் நகராட்சி உள்ள பேரமனூர் சாமியார் கேட் பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண், விவேகானந்தர் தெருவை சேர்ந்த 49 வயது பெண், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த திருக்கச்சூர் மேற்கு மாட வீதி தெருவை சேர்ந்த 64 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்

ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியை சேர்ந்த 44 வயது பெண், நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் காமராஜபுரம் என்.எஸ்.கே. தெருவை சேர்ந்த 28 வயது வாலிபர், சீனிவாசபுரம் மகாலஷ்மி தெருவை சேர்ந்த 78 வயது மூதாட்டி, வண்டலூர் ஊராட்சி கம்பர் தெருவில் வசிக்கும் 23 வயது இளம்பெண் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 553 ஆக உயர்ந்தது. இவர்களில் 5 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 32 வயது இளம்பெண், 55 வயது ஆண், 62 வயது முதியவர், 65 வயது மூதாட்டி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மலைப்பட்டு மாகண்யம் சாலைப் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் மற்றும் ஆதனூர் ஊராட்சியில் உள்ள வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 117 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக கண்டறியப்பட்டது. இதில், 1,499 பேர் குணமுடைந்து வீடு திரும்பினர். 2,539 தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 53 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்