மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,152 பேர் பாதிப்பு 12 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,152 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1000-த்தை தாண்டி செல்கிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 1,152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 63 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56 ஆயிரத்து 639 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

6 ஆயிரத்து 148 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 831 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 12 பேர் இறந்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு