மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு

திருவாரூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம், ஈஞ்சல், கீழத்துறைக்குடி உள்பட 5 கிராமங்களில் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி மாவூர் கடைவீதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கீழத்துறைக்குடியை சேர்ந்த உலகநாதன் (வயது 67), ராஜேந்திரன் (60), ஜெகநாதன் (65), மகாலிங்கம் (55), சிவசாமி (50) மற்றும் 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்