மாவட்ட செய்திகள்

உத்திரமேரூரில் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது

உத்திரமேரூரில் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீரடி அருகே சாலையில் 2 பேர் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டுவதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கத்தி முனையில் 2 பேர் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த வசி என்கிற வசீகரன் (வயது 38) என்பதும், மற்றொருவர் உத்திரமேரூர் ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (36) என்பதும் தெரியவந்தது.

மேலும், வசீகரன் மீது புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் பல வழக்குகள் உள்ளதாகவும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் என்பதும் 6 ஆண்டுகளாக உத்திரமேரூர் ஏ.பி. சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டு காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு