மாவட்ட செய்திகள்

விருதுநகர், ராஜபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது

விருதுநகர் மற்றும் ராஜபாளையம் பஸ் நிலையங்கள் அருகே மறியல் போராட்டம் நடத்திய 89 பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே சி.ஐ. டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 40-க் கும் மேற்பட்டார் கலந்துகொண்டனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும். இதற்காக மத்திய-மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைத்து செயல்படுத்த வேண்டும். அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பெண்கள் உள்பட 46 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் விருதுநகர் பஸ் நிலையம் முன்பு பெண்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் சாரா தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டதாக 48 பெண்கள் உள்பட 51 பேரை விருதுநகர் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்