கொடைக்கானல்:
கொடைக்கானலில் அகில இந்திய கட்டிட கட்டுமானோர் மையத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் தலைவராக ஜீ.வி.வீர ராஜேஷ்கண்ணா, செயலாளராக அம்மன் மாரியப்பன், பொருளாளராக கிருஷ்ணகுமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கொடைக்கானலில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் மையத்தின் மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மையத்தின் அகில இந்திய உடனடி தலைவர் மோகன், கொடைக்கானல் முன்னாள் நகரசபை தலைவர் ஸ்ரீதர், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, மையத்தின் முன்னாள் தலைவர்கள் ரகுவரன், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.