மாவட்ட செய்திகள்

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தபோதிலும், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

ஊட்டி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தபோதிலும், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன் பின்னரே வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டது.

ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கமாக அதிகம் பேர் வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த போதும், வார விடுமுறை நாளில் பொழுதை கழிக்கவும், குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

வருகை அதிகரிப்பு

குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகை தந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவுவாயிலில் பூத்துக் குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து பெரணி இல்லம், கண்ணாடி மாளிகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பெரணி செடிகள், மலர்கள், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். மலர்களுடன் கூடிய செல்பி ஸ்பாட் முன்பு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்

பின்னர் பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். நேற்று முன்தினம் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 2,859 பேர் வருகை தந்தனர். கடந்த 12-ந் தேதி சனிக்கிழமை 6 ஆயிரத்து 944 பேரும், நேற்று 6,500-க்கு மேற்பட்டோரும் பூங்காவை கண்டு ரசித்தனர்.

தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்துதான் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்