மாவட்ட செய்திகள்

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு இந்திராணி முகர்ஜி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

மும்பை,

பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேரும் ஜெயிலில் தான் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கைதி மஞ்சுளா கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு காரணமாகவும் ஜெயிலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்