பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி சார்பில் வீடுகள், கடைகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சாலையோரங்களில் குளோரின் பவுடர் உள்ளிட்ட கிருமி நாசினியினை எந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர். இதுதவிர முக்கிய இடங்களில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வீரர்கள் தண்ணீரில் கிருமி நாசினியினை கலந்து தெளித்தனர்.
இதனால் நகர் முழுவதும் கிருமி நாசினி வாசம் வீசுகிறது. நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் ஆலோசனையின் பேரில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.