மாவட்ட செய்திகள்

பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

ஆண்டிப்பட்டி தாலுகாவில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி:

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.அதன்பின்னர் நோய் பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கிருமிநாசனி தெளித்து தயார்ப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில் திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திராநகர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் கனிராஜா, துணைத்தலைவர் செல்லம்மாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மேற்பார்வையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு