மாவட்ட செய்திகள்

கடலூர் உள்பட 3 இடங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான நேர்முகத்தேர்வு 3,500 பேர் பங்கேற்பு

கடலூர் உள்பட 3 இடங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக சமீபத்தில் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 19 ஆயிரம் பேருக்கு கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 3 இடங்களில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கடலூர் செம்மண்டலம் வேளாண் விற்பனை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேர்முகத்தேர்வு நடந்தது. இதற்காக காலை 10 மணிக்கு முன்பே விண்ணப்பதாரர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் அவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசம்

மேலும் முக கவசம் அணிந்தவர்களை மட்டுமே செல்ல அறிவுரை வழங்கினர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு முக கவசம் வழங்கினர். சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தினர். தொடர்ந்து அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கூட்டுறவு துறை சார்ந்த பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டன. தேர்வை துணை பதிவாளர் சண்முகம் ஆய்வு செய்தார்.

இதேபோல் விருத்தாசலத்தில் துணை பதிவாளர் ஜீவானந்தம், சிதம்பரத்தில் துணை பதிவாளர் துரைசாமி ஆகியோர் தலைமையில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3,500 பேர்

இது பற்றி கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணிக்காக 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 19 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதன்படி இன்று (அதாவது நேற்று) முதல் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக நாள் ஒன்றுக்கு 1,000 பேர் வீதம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கடலூரில் மட்டும் 1,500 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலை, மாலை 2 வேளை நேர்முக தேர்வு அலுவலர்களால் நடத்தப்பட்டது. அதன்படி இன்று (நேற்று) மட்டும் 3 இடங்களிலும் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இந்த நேர்முக தேர்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்