மாவட்ட செய்திகள்

விருகம்பாக்கத்தில் துணிகரம் அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களிடம் கத்திமுனையில் நகை பறித்த கும்பல் ஒருவர் சிக்கினார்; 4 பேர் தப்பி ஓட்டம்

விருகம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்துக்குள் புகுந்து கத்தி முனையில் பெண்களிடம் நகை, பணம் மற்றும் செல்போன்களை பறித்ததாக ஒருவர் சிக்கினார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி,

வளசரவாக்கத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் விருகம்பாக்கம், சாலிகிராமம், ஆற்காடு சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இதில் 3 பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அழகு நிலையத்திற்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், அங்கு பணியில் இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டியது. பின்னர் பெண் ஊழியர்களிடம் இருந்து 3 செல்போன்கள், 3 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் வெளியே வந்தது.

அதற்குள் பெண் ஊழியர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றது. அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த நபர்களை மடக்கிப்பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள், விருகம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்ற 4 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுரேந்திரன் (வயது 28) என்பது தெரியவந்தது மேலும் தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அழகு நிலையத்திற்குள் புகுந்து கத்திமுனையில் பெண்களிடம் நகை, பணம் பறித்து சென்ற சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்