வைகோ, முத்தரசன் 
மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற தமிழக விவசாயிகளை அடக்குவதா? வைகோ, முத்தரசன் கண்டனம்

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்' பேரணியை தடுக்கும் முயற்சிகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றார்கள். இந்த போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு தஞ்சாவூரில் நடத்த இருந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து மறித்து அடக்குமுறையில் கைது செய்து இருக்கின்றனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். பேரணியை தடுக்கும் முயற்சிகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு காட்டும் மிக சாதாரண ஜனநாயக உரிமையைக்கூட அனுமதிக்க மறுக்கும் அரசு போலீசாரின் அடக்குமுறையை ஏவி விவசாயிகள் நலனை வஞ்சித்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதல்-அமைச்சர் இதில் நேரடியாக தலையிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்