மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து துணை நடிகையிடம் நகை, பணம் பறிப்பு

வீடு புகுந்து துணை நடிகையிடம் நகை, பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தினத்தந்தி

சென்னை வளசரவாக்கம், ஏ.கே.ஆர். நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 35). சினிமா துணை நடிகையான இவர், கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது அவரது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. விஜயலட்சுமி கதவை திறந்தார். வெளியே நின்றிருந்த 2 மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி துணை நடிகை விஜயலட்சுமி அணிந்திருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு