மாவட்ட செய்திகள்

சூளைமேட்டில் பூட்டை உடைத்து மின்ஊழியர் வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை

சென்னை சூளைமேட்டில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 78 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஜோதி ராமலிங்கம்

சென்னை சூளைமேடு, ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குரோம்பேட்டையில் வசிக்கும் தனது மகனை பார்க்க சென்றார். நேற்று காலை சூளைமேடு திரும்பி வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் அலங்கோலமாக கிடந்தன.

நகை கொள்ளை

வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து, பீரோவில் இருந்த 78 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சூளைமேடு போலீசில் ஜோதி ராமலிங்கம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு