மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் 7½ பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி (வயது 85). விவசாயி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துரைசாமியும், அவரது மனைவியும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலை துரைசாமி எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் பார்த்தபோது பானையில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள் மர்மநபரால் திருடப்பட்டிருந்தது.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு