மாவட்ட செய்திகள்

மொட்டை மாடியில் இருந்து குதித்து முன்னாள் போலீஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை

ஜோகேஸ்வாயில் கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வந்தவர் ஆர்த்தி(வயது52). இவரது கணவர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். ஆர்த்திக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை அவர் வசித்து வரும் கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூப்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதில் ஆர்த்தி கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆர்த்தி உடல்நல பிரச்சினைகள் காரணமாக விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது