மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அந்த பகுதி பொதுமக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.