மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மறைந்த ஸ்ரீதரின் கூட்டாளியான ரவுடி தினேஷ் மீது 7 கொலை, 20 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 38 வழக்குகள் உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சிவகாஞ்சி போலீசில் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் ரவுடி தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தினேசை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் துணை கண்காணிப்பாளர் ஜுலியஸ் சீஸர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தேடி வருவதை அறிந்ததும் ரவுடி தினேஷ், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் தன்னை விடாமல் தேடி வருவதால் ரவுடி தினேஷ், சைதாப்பேட்டை பெருநகர 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தினேசை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு