மாவட்ட செய்திகள்

கவரிங் நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் மோசடி

காஞ்சீபுரத்தை அடுத்த ஒரிக்கையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஒரிக்கையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் 2 பவுன் நகையை அடகு வைத்து ஆறுமுகத்திடம் இருந்து ரூ.30 ஆயிரம் வாங்கி சென்றனர். அதன் பின்னர் ஆறுமுகம் அந்த நகையை சோதனை செய்தபோது, அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது.

அவர்கள் அளித்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் அளித்த முகவரியும் போலியானது என்பது தெரியவந்தது.

இது குறித்து ஆறுமுகம் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்