மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில், இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலைமறியல்

கொடைக்கானலில் இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கொடைக்கானல்,

கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த 75 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை.

எனவே இதனை கண்டித்தும், இலவச மடிக்கணினி கேட்டும் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேற்று காலை கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வத்தலக்குண்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்

இதனால் அங்கு சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் இலவச மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை