மாவட்ட செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ: சிகிச்சை பெறும் 15 பேரில் 4 பேருக்கு 90%, 5 பேருக்கு 70% தீக்காயம்; மீட்பு பணிகள் நிறைவு

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மதுரையில் சிகிச்சை பெறும் 15 பேரில் 4 பேருக்கு 90 %, 5 பேருக்கு 70 % தீக்காயம் ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. #KuranganiForestFire

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வந்தன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 10 பேர் காயம் எதுவும் அடையவில்லை.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 15 பேர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சென்னையை சேர்ந்த நிஷாவுக்கு 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. ஈரோடு திவ்யா, சென்னை அனுவித்யா, திருப்பூர் சக்திகலா, பொள்ளாச்சி திவ்யா ஆகிய 4 பேருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று 5 பேருக்கு 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஈரோடு கண்ணன், சேலம் தேவி, சென்னை திவ்யஸ்ரீ, ஸ்வேதா, பார்கவி என அடையாளம் காணப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

தஞ்சாவூர் சாய் வாசுமதிக்கு 55 சதவீதமும், சென்னை நிவ்யபிரெக்ருதிக்கு 40 சதவீதமும், கேரளாவின் கோட்டயத்தினை சேர்ந்த மினா ஜார்ஜ்க்கு 30 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. குரங்கணி காட்டுத்தீ பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்தன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்