மாவட்ட செய்திகள்

கியாஸ் டேங்கர் லாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

கோவையில் நேற்று 3-வது நாளாக கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்று இல்லாமல் ஒரே மாதிரியான டெண்டர் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி, தென் இந்தியாவில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவையில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. பாரத், இந்துஸ்தான், இண்டேன் ஆகிய நிறுவனங்களுக்கு கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் கியாஸ் பாரம் ஏற்றி வரவில்லை. டிரைவர் மற்றும் கிளனர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.

கோவை கணபதியில் உள்ள பாரத் கியாஸ் நிரப்பும் மையத்தின் அதிகாரி கூறும்போது, இன்னும் ஒரு சில நாட்கள் இந்த போராட்டம் நீடித்தால் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும். இதுவரை அந்த நிலை இல்லை. மும்பை உரான் பகுதியில் இருந்து இன்னும் ஒரு சில நாட்களில் கியாஸ் பாரம் ஏற்றப்பட்ட 2 சரக்கு ரெயில்கள் வந்த பின்னர் நிலைமை சமாளிக்கப்படும் என்று தெரிவித்தார்.மற்ற கியாஸ் நிறுவனங்களுக்கும் கியாஸ் சப்ளை இல்லாததால் ஒரு சில நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு