மாவட்ட செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

அவினாசி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

திருப்பூர்

அவினாசி அருகே உள்ள பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனியா (20). கர்ப்பிணியான சோனியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் அவினாசி அருகே துலுக்கமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது பிரசவ வலி அதிகமாக இருந்ததால், குப்பாண்டம்பாளையம் பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் சோனியாவிற்கு, மருத்துவ உதவியாளர் பூபேஷ் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து டிரைவர் கார்த்திக் மற்றும் மருத்துவ உதவியாளர் பூபேஷ், பிரசவித்த சோனியாவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்