மாவட்ட செய்திகள்

விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டும்

திருமாந்துறையில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய தொழிலாளர் அணி மாநில கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் துறைமங்கலம் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீர.செங்கோலன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் அய்யாக்கண்ணு வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநில நிர்வாகிகள் கருப்புசாமி, வக்கீல் சீனிவாசராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் ஆகியவற்றை வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக தூர்வாரி சீரமைக்கவேண்டும். பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்காக 2008-ம்ஆண்டில் 3 ஆயிரத்து 155 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சிறப்புபொருளாதார திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

வேலை

எனவே உடனே இந்த திட்டத்தை தொடங்கி நிலத்தை இழந்த விவசாய குடும்பங் களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நிலங்களை மீட்டு உரிய விவசாயிகளிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். விவசாயத்தை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் அருள் நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்