மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி டிரைவர் படுகாயம்

பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தில் உள்ள பாலத்தின் அருகே நேற்று அதிகாலை எம் சாண்ட் மணலை ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெரம்பலூர்,

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தில் உள்ள பாலத்தின் அருகே நேற்று அதிகாலை எம் சாண்ட் மணலை ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த லாரி அரியலூருக்கு மணல் ஏற்றி சென்றதாகவும், லாரி ஓட்டி வந்த டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் பகுதியை சேர்ந்த அசோகன் (வயது 35) என்பதும் தெரியவந்தது. அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் தூக்க கலக்கத்தில் சென்ற போது விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை யடுத்து சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்