மாவட்ட செய்திகள்

4-வது நாளாக நீடித்த லாரிகள் வேலை நிறுத்தம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அபாயம்

மராட்டியத்தில் 4-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது. நவிமும்பையில் 12 லாரிகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

மும்பை,

லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மராட்டியத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளன. சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

அரசு லாரி உரிமையாளர்களுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாததால் இந்த போராட்டம் தொடரும் என கூறப்படுகிறது. இதனால் மும்பையில் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் தலோஜா தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். இதில் 12 லாரிகள் சேதமடைந்தன. இந்தநிலையில் காலை டிரைவர்கள் லாரிகள் சேதமடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் தலோஜா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிகளை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு