விழுப்புரம்,
பிறந்த நாள் விழா காணும் நபரின் நண்பர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கேக்கை அரிவாள் மற்றும் பட்டாக்கத்தி, வீச்சரிவாள் போன்ற அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி வெட்டுவதும் பின்னர் அந்நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றச்செயல் ஆகும்.
விழுப்புரத்தில் அதுபோன்று வக்கீல் ஒருவர், தனது பிறந்த நாள் விழாவை நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.