புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை சார்பில் 139 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.60 லட்சத்து 20 ஆயிரம் கடன் உதவி மற்றும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம், கிராம ஊராட்சிகளுக்கு 12 பேட்டரியில் இயங்கும் குப்பை வண்டி ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில் பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் சரோஜா, ஈரோடு ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், புளியம்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் ஜி.கே.மூர்த்தி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் துரைசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அ.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.