மாவட்ட செய்திகள்

தொப்பூர் கணவாயில் அரிசி மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்தது 2 டிரைவர்கள் படுகாயம்

தொப்பூர் கணவாயில் அரிசி மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்தது 2 டிரைவர்கள் படுகாயம்.

தினத்தந்தி

நல்லம்பள்ளி,

கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மூட்டைகள் ஏற்றிய ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அந்த லாரியை ஓட்டி வந்த பெருந்துறையை சேர்ந்த பிரதீப்குமார்(வயது 22), மாற்று டிரைவர் பகவதி(48) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு