மாவட்ட செய்திகள்

போக்குவரத்து சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே போக்குவரத்து சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வெ.ரா.சாலையில் அமைந்துள்ள சிக்னலில் போக்குவரத்து போலீசாருக்கான நிழற்குடை புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த நிழற்குடையில் எல்.இ.டி. டியூப் லைட், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பிளைவுட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் பயன்பாட்டை வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் உதவி போலீஸ் கமிஷனர் கிறிஸ்டோபர் நேற்று திறந்து வைத்தார். இந்த சிக்னலில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த நிழற்குடையில் இருந்து போலீசார் மைக் மூலம் பேசி சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளை எச்சரித்து, போக்குவரத்தை சீர்ப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு கூறுகையில், சென்னையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில், போக்குவரத்து போலீசாருக்கு என்று பிரத்யேகமாக நவீன வசதிகளுடன் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு