மாவட்ட செய்திகள்

ரெயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே நடந்து உள்ளது.

பெங்களூரு: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே நடந்து உள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் டவுன் சம்மத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் மணி (வயது 27).இவரும் அதேப்பகுதியை சேர்ந்த அனுஷா (24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மணியும், அனுஷாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறிய மணியும், அனுஷாவும் சம்மத்தூர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு 2 பேரும் பாய்ந்தனர். இதில் ரெயிலில் அடிப்பட்ட 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

நேற்று காலை மணியும், அனுஷாவும் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மணியும், அனுஷாவும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆனேக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு