மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்துகொண்டு தலைமறைவான கணவரை கண்டுபிடித்து தரும்படி: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கர்ப்பிணி கோரிக்கை

2-வது திருமணம் செய்துகொண்டு தலைமறைவான கணவரை கண்டுபிடித்து தரும்படி கர்ப்பிணி பெண், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துமகூரு,

கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்தவர் திவ்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து திவ்யாவும், பிரதாப்பும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது திவ்யா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பிரதாப் சிக்கமகளூருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதாப், முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திவ்யா சமூகவலைத் தளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில், நானும், பிரதாப்பும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம்.

தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் பிரதாப் 2-வது திருமணம் செய்துகொண்டு தலைமறைவு ஆகிவிட்டார்.

தற்போது நான் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக வசிக்கிறேன். எனவே எனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்துவைக்க முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்