மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை; தென்காசியில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைப்பு

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளித்தல், வீடு வீடாக சென்று விசாரணை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் தென்காசியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இரவு 8 மணி வரை கடைகள் திறந்து இருந்தன. அங்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வர்த்தக சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் பரமசிவன், பொருளாளர் ஜெயராமன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாலை 6 மணியுடன் அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டது. ஓட்டல்களில் மட்டும் இரவு 9 மணி வரை பார்சல்கள் கொடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு அடைக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு