மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டையை அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள குப்பை தொட்டிகள் முறையாக வைக்கப்படாமல் கவிழ்ந்து கிடக்கிறது.

மேலும் குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்றவும், குப்பைகளை கொட்டுவதற்கு கூடுதல் குப்பை தொட்டிகளை வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு