மாவட்ட செய்திகள்

தஞ்சையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்படும் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

தஞ்சையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என்று ஆர்.வைத்திலிங்கம் எம்.பி பேசினார்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.வி.சேகர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் துரைசெந்தில் வரவேற்றார். பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் நகர செயலாளர் ஏ.பிச்சை, மதுக்கூர் நகர செயலாளர் முகமது சரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் தகுதி, திறமை, விசுவாசம் உள்ள யாரும் எந்தப் பதவிக்கும் வரலாம். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் இந்த இயக்கத்தில் தான் இருந்து வருகிறேன். அ.தி.மு.க.வைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பேச டி.டி.வி. தினகரனுக்கு எந்த தகுதியும் கிடையாது.

தஞ்சையில் வருகிற 29-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் சிறப்பாக நடத்தப்படும். எனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு பட்டுக்கோட்டை தொகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கு.பரசுராமன் எம்.பி, மா.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட பால் வளத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.என்.ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.மலைஅய்யன், மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் வி.மகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுபராஜேந்திரன் நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்