மாவட்ட செய்திகள்

தீபாவளி போனஸ் கேட்டு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாண்லே மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலை தீவனத்தை மாதந்தோறும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாகூர்,

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் பாண்லே மூலம் ஒரு ரூபாய்க்கு 10 பைசா என்ற விகிதத்தில் போனஸ் வழங்கிட வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் ஊக்க தொகை வழங்கிட வேண்டும். பாண்லே மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலை தீவனத்தை மாதந்தோறும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முருகையன், தனவேல், நாராயணன், மாயவன், செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை சங்க சிறப்பு தலைவர் கீதநாதன் தொடங்கி வைத்தார். மாசிலாமணி, ராஜா, கலியமூர்த்தி, ராமச்சந்திரன், ஆறுமுகம், சசிதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில குழு உறுப்பினர் தாமோதரன் நன்றி கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு