மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 100 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் வழங்கினார்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 100 குடும்பத்தினருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் கோலியனூர் பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள், வடமாநில தொழிலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு கோலியனூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோலியனூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் வழங்கினார்

சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 100 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், ரொட்டி, பிஸ்கெட் ஆகியவற்றை நிவாரண உதவியாக வழங்கினார். இதில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கலியமூர்த்தி, இளைஞரணி செயலாளர் சேட்டு பார்த்தசாரதி, ஒன்றிய இணை செயலாளர் கவிதாசெந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா முருகன், ஒன்றிய துணை செயலாளர் பவானி தமிழ்மணி, விவசாய அணி தலைவர் விஜயன், பாசறை செயலாளர் பாக்யராஜ், இலக்கிய அணி தலைவர் கணேசன், கிளை செயலாளர்கள் உதயசூரியன், ரஜினி, ஹரிதாஸ், ஊராட்சி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனம் பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கோவில் பூசாரிகள், கோவில் ஊழியர்கள், மேளக்காரர்க ளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட 17 வகையான மளிகை பொருட்களை கோவில் பூசாரிகள், ஊழியர்கள், மேளக்காரர்கள் உள்பட இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு வழங்கினார். அப்போது திண்டிவனம் ராம் டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன், அறநிலைத்துறை கணக்காளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்