விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது 
மாவட்ட செய்திகள்

அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் பெயரை புறக்கணித்ததாக கூறி அமைச்சர் கே.சி.வீரமணியுடன் தி.மு.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம்; 2 கட்சியினரும் கோஷமிட்டதால் பரபரப்பு

வாணியம்பாடி அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழா மேடையில் அமைச்சர் கே..சி.வீரமணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தி.மு.க.எம்.எல்.ஏ.பாதியில் வெளியேறினார். அப்போது 2 கட்சியினரும் எதிர் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மினி கிளினிக் திறப்பு விழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், எம்.எல்.ஏ. ஆகியோர் அம்மா மினிகிளினிக்கை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சென்று கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அம்மா மினி கிளினிக் திட்டம் குறித்து விளக்கி பேசவும் அமைச்சர்கள் மேடை ஏறினர்.

அப்போது ஆம்பூர் எம்.எல்.ஏ,. வில்வநாதன், அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது தொகுயில் நடைபெறும் விழாவிற்கு முறையாக அழைக்கப்படவில்லை. அரசு விழாக்கான பேனர்களில் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவரை சமாதானம் செய்ய அமைச்சர் கே.சி.வீரமணி முயன்று அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மேடையை விட்டு இறங்கி வெளியேறினார். அங்கு கூடி இருந்த அ.தி.மு.க.- தி.மு.க. தொண்டர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து பலத்த கோஷங்களை எழுப்பினர்.

எம்.எல்.ஏ. வெளியேறிய பின் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அரசு திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் வீரமணி பேசுகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள அம்மா மினி கிளினிக் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சிக்கு வரும் முன்பு இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அருகே நடந்த அரசு விழாவில் அத்தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தினார்.

இப்போது இங்கே வந்து ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அதே போல் பிரச்சினையை ஏற்படுத்துகிறார். மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் இந்த அரசு தொடர்ந்து நீடித்திட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மாநில திட்ட மதிப்பீட்டு குழு உறுப்பினர் செந்தில்குமார், வாணியம்பாடி நகர கூட்டுறவு இயக்குனர் சதாசிவம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் மதியழகன் உள்பட கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்