மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து; ரூ.2 லட்சம் முட்டைகள் நாசம்

திருவள்ளூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ.2 லட்சம் முட்டைகள் உடைந்து நாசமானது.

மினிவேன் கவிழ்ந்தது

திருவள்ளூரை அடுத்த திருத்தணி கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 52). இவர் மினி வேனில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு முட்டை வினியோகம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், நேற்று காலை திருவள்ளூரில் இருந்து மினி வேனில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை ஏற்றிக்கொண்டு கடைகளுக்கு வினியோகம் செய்தவாறு திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த ராமஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முட்டைகள் நாசம்

இதில் மினி வேனில் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள முட்டைகள் நெடுஞ்சாலையில் விழுந்து உடைந்து ஆறாக ஓடியது.

இந்த விபத்தில் வேன் டிரைவரான நந்தகுமார் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நெடுஞ்சாலையில் சிதறிக்கிடந்த முட்டைகளை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அந்த வழியாக சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்