மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறவும் இளைஞர்கள் ரத்ததானம்; வேட்பாளர் கதிரவன் முன்னிலையில் அளித்தனர்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டியும் சமயபுரம், பி.பி. பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்கள் ரத்ததானம் செய்தனர்.

வாக்கு சேகரிப்பு

மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோதூர்பட்டி, கஸ்தூரிப்பட்டி, சாலபட்டி, சாதம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். நான் வெற்றி பெற்றால் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று அவர் வாக்குறுதியளித்தார். மேலும் வேலை வாய்ப்பு உருவாக்கி தருகிறேன், கோவில்களை புதுப்பித்து தருகிறேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும் சமயபுரம் பகுதியை சேர்ந்த பி.பி. பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேட்பாளர் கதிரவன் முன்னிலையில் ரத்ததானம் கொடுத்தனர். அப்போது, நான் வெற்றிபெற்றால் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்