மாவட்ட செய்திகள்

கண்ணமங்கலம் அருகே நிலக்கடலை செடிகளை பிடுங்கி குரங்குகள் அட்டகாசம் - வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே நிலக்கடலை செடிகளை பிடுங்கி குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசலில் திருவண்ணாமலை மெயின்ரோடில் கல்லாங்குத்து பகுதியில் மானாவாரி பயிர்களாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் மணிலா (வேர்க்கடலை)பயிர் செய்து உள்ளனர்.

விரைவில் நிலக்கடலை பிடுங்கும் தருவாயில் உள்ளது. இச்செடிகளை அப்பகுதியில் 24 மணி நேரமும் தொல்லை தரும் குரங்குகள் நேரடியாக சென்று பிடுங்கி நிலக்கடலையை உண்டு மகிழ்கின்றன.

இதைக்கண்டு விவசாயிகள் வேதனையுடன் செய்வதறியாது திகைக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் நிலக்கடலை பயிருக்கு தாங்கள் செலவு செய்த தொகை கூட கிடைக்காது. எனவே சந்தவாசல் வனத்துறையினர் கல்லாங்குத்து பகுதியில் முகாமிட்டு சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காடுகளில் விட ஏற்பாடு செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்