மாவட்ட செய்திகள்

தற்காலிக பணியாளர்கள் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன

திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக பணி யாளர்கள் மூலம் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

திருவாரூர்,

ஊதிய உயர்வு, நிலுவை தொகை போன்ற காரணங் களால் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 4 பணிமனைகளில் இருந்து மொத்தம் 239 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அரசு பஸ்கள் இயக்கப்பட்டன

இதில் நேற்று தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு