மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளகுட்டை - பூவாங்கமரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி காத்தாய் அம்மாள் (வயது 80). இவர்களது மகன் பிரகாசம் (60). தாயும், மகனும் ஒரே வீட்டில் தனித்தனி பகுதியில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்களது வீடு வெளிப்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் தரையில் காத்தாய் அம்மாளும், பிரகாசம் தூக்குப்போட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காத்தாய் அம்மாளை அவரது மகன் பிரகாசம் கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரும் கெலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்